தமிழ்நாடு

சீர்காழியில் தபால் ஓட்டு வழங்காததால் தேர்தல் பணியாளர்கள் போராட்டம்

DIN

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. 

இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், நூலக பணியாளர்கள் உள்ளிட்ட 384 பேருக்கு தபால் ஓட்டு வழங்காததால் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT