தமிழ்நாடு

செவிலியர்கள் சீருடை மாற்றம்: அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு

DIN

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கான புதிய சீருடையை மாற்றி அரசு பிறப்பித்துள்ள அரசாணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் செவிலியர்கள் இருவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக
அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கான சீருடைகளை மாற்றி தமிழக அரசு கடந்த  டிசம்பர் 7-இல் அரசாணை பிறப்பித்தது. 
நாங்கள் தனியார் செவிலியர் கல்லூரியில் படித்து கடந்த 2015-இல் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தோம். 
தற்போது அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி எங்களை போன்றவர்களுக்கு, அதாவது 10 ஆண்டுகளுக்கு கீழ் பணியாற்றுபவர்களுக்கு வெள்ளை நிற அரைக்கை சட்டையும், பேண்டும் சீருடையாக வழங்கப்பட்டுள்ளது. 
அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்து பணியில் சேர்ந்தவர்களுக்கு அதாவது 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் செவிலியர்களுக்கு வெள்ளை நிற அரைக்கை சுடிதார்- பேண்ட் மற்றும் மேல் கோட் சீருடையாக வழங்கப்பட்டுள்ளது.
 செவிலியர்கள் ஒரே பணிகளைச் செய்யும் போது சீருடை விவகாரத்தில் பாகுபாடு காட்டுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். 
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது.
 அப்போது அரசு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு வழக்குரைஞர் ஆர்.எஸ்.செல்வம் ஆகியோர் ஆஜராகி, அரசாணைக்குத் தடை விதிக்கக் கூடாது என வாதிட்டனர்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, இந்த மனு தொடர்பாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர், மருத்துவத் துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT