முகப்பு
தமிழ்நாடு

அறிஞர் அண்ணாவின் 50-ஆவது நினைவு தினம்: திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 50-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 3 பிப்ரவரி, 2019 at 11:36 AM
பகிர்:

சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 50-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அறிஞர் அண்ணாவின் 50வது நினைவு தினம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடந்தது. அதன்பின்னர் தி.மு.க. சார்பில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, தயாநிதி மாறன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.