தமிழகத்தில் திருச்சி லால்குடி அருகே கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரும், சமயபுரத்தை சேர்ந்த கீழவாளாடியைச் சேர்ந்த செந்தில்குமாருக்கும் ஒரே எண்ணில் பான் கார்டு எண் வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி லால்குடி அருகே கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(42). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன், வருமான வரித்துறை மூலம் பான் கார்டு வழங்கப்பட்டது. அதில் “DYRPS6164P" என்ற எண் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் செந்தில்குமார், வங்கியில் தனிநபர் கடனுக்காக விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து அவரது ஆதார், பான் கார்டு எண் உள்ளிட்டை சரிபார்க்கப்பட்டுள்ளது. அப்போது செந்தில்குமார் பெயரில் ஏற்கனவே கடன் இருப்பதாகவும், அதுவும் நகை அடமானக் கடன் என்றும், அவர் அளித்த செக் ஒன்று பவுன்ஸ் ஆகியுள்ளது. அவரது ‘சிபில் ஸ்கோர்’ குறைவாக இருப்பதாகவும் கணினி தெரிவிக்கப்பட்டுள்ளதால் கடன் மறுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலால் அதிர்ச்சியடைந்த செந்தில்குமார், இதுவரை தான் கடன் வாங்கியதில்லை என்றும், இதுகுறித்த விசாரணையில் இறங்கியுள்ளார். அதில், தனக்கு ஒதுக்கப்பட்ட பான் கார்டு எண்ணே, சமயபுரம் கீழவாளாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் அப்பா பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருந்துள்ளதுடன் பான் கார்டு எண்ணும் ஒன்றாக இருந்துள்ளதை தெரிந்துகொண்ட செந்தில்குமார், கடன் பெற்ற செந்தில்குமாரை சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறியுள்ளார்.
தகவலை அறிந்து திர்ச்சி அடைந்த செந்தில்குமார், வருமான வரித்துறையின் அலட்சியத்தால் நம் போன்றோரின் சம்பள பிடித்தம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதுபோன்ற குளறுபடிக்கு யார் பொறுப்பு என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளிடம் முறையிட போவதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
வருமான வரித்துறையினரின் அலட்சியம் பான் கார்டின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.