தமிழ்நாடு

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்குள் இயக்குநர் நியமனம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

DIN

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்குள் இயக்குநர் நியமனம் செய்யப்படுவார் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. எனவே, செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தின் தலைவரான முதல்வர், நிறுவனம் முழு வீச்சில் செயல்பட மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மத்திய அரசு ரூ8 கோடி நிதி ஒதுக்கவேண்டி உள்ளது. நிதி ஒதுக்கியதும் செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் 3 மாதத்தில் அமைக்கப்படும். மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்குள் இயக்குநர் நியமிக்கப்படுவார். மத்திய அரசால் நிறுத்தப்பட்ட கலைஞர் விருதை மீண்டும் வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT