தமிழ்நாடு

அனைத்து திட்டங்களையும் ரத்து செய்து தமிழகம் திரும்பினார் நிர்மலா சீதாராமன்

DIN

இரு தினங்களுக்கான அனைத்து திட்டங்களையும் ரத்து செய்துவிட்டு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் திரும்பினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புலவாமா பகுதியில் வியாழக்கிழமை பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா உட்பட பெரும்பாலான உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

மேலும் உயிரிழந்த வீரர்களுக்கு தில்லியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். 

இந்நிலையில், இரு தினங்களுக்கான அனைத்து திட்டங்களையும் ரத்து செய்துவிட்டு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சனிக்கிழமை தமிழகம் திரும்பினார். உயிரிழந்த தமிழக வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வந்தடைந்தார்.

இதையடுத்து கர்நாடக மாநிலத்துக்கு சென்று அம்மாநிலத்தை சேர்ந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். முன்னதாக, அனைத்து மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துமாறு பிரதமர் மோடி கட்டளையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT