தமிழ்நாடு

தமிழகத்தில் 4 தொழிலதிபர்களுக்கு சொந்தமான 31 இடங்களில் வருமான வரித்துறை சோதனை 

தமிழகத்தில் நான்கு தொழிலதிபர்களுக்கு சொந்தமான 31 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

சென்னை: தமிழகத்தில் நான்கு தொழிலதிபர்களுக்கு சொந்தமான 31இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத வரித்துறை அதிகாரியொருவர் கூறியதாவது:

தமிழகத்தில் சென்னை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் நான்கு தொழிலதிபர்களுக்குச் சொந்தமான 31 இடங்களில் வியாழன் அன்று ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றன.  

இவர்கள் யாவரும் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரினை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ரியல் எஸ்டேட், பால் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனைகளின் போது கணிசமான பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்ன்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

அண்ணாமலை குடும்பம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

இந்த சர்ச்சையால்... கண்ணீர்விட்ட கயாது லோஹர்!

வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

SCROLL FOR NEXT