தமிழ்நாடு

ஆஸ்கர் விருது பெற்ற குறும்படத்தில் நடித்துள்ள தமிழருக்கு ஸ்டாலின் வாழ்த்து 

ஆஸ்கர் விருது பெற்ற குறும்படத்தில் நடித்துள்ள  கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற குறும்படத்தில் நடித்துள்ள கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்கர் விருதுகளில் `period. end of sentence' குறும்படத்திற்கு விருது கிடைத்திருக்கிறது. இந்த குறும்படத்தில் கடந்த பல வருடங்களாகக் குறைந்த விலையில் பெண்களுக்கான நாப்கின்களைத் தயாரித்து வரும் கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம்  நடித்துள்ளார். இவரைப்பற்றிய ஆவணப் படங்கள் இதுவரை நிறைய வந்துள்ளன.

இந்நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற குறும்படத்தில் நடித்துள்ள கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

#PeriodEndOfSentence ஆஸ்கர் விருது பெற்றிருப்பது பெருமைக்குரிய செய்தி.

எளிய மக்கள், குறிப்பாக மகளிர் மீது அக்கறை கொண்டு செயலாற்றியத் தமிழர் அருணாசலம் முருகானந்தம் அவர்களுக்கும் அந்தத் தமிழருடைய சாதனையை உலகளவிற்குக் கொண்டு சென்ற படக்குழுவினருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - கமல் படத்திலிருந்து வெளியேறியது ஏன்? கைதி - 2 என்ன ஆனது? லோகேஷ் பதில்!

ஆளுநர் தேநீர் விருந்து: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு!

தேர்தல் பணியாற்ற உறுதியேற்போம்: தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அதிமுக Vs தவெக! எல்லைமீறும் விர்ச்சுவல் வாரியர்ஸ் மோதல்!

ஜன நாயகனில் நடித்துள்ளேன்: லோகேஷ் கனகராஜ்

SCROLL FOR NEXT