தமிழ்நாடு

சேலம்-காட்பாடி ரயில் இன்று முதல் அரக்கோணம் வரை நீட்டிப்பு

சேலம்-காட்பாடி பயணிகள் ரயில் வியாழக்கிழமை (பிப். 28) முதல் அரக்கோணம் வரை இயக்கப்பட உள்ளது.

DIN


சேலம்-காட்பாடி பயணிகள் ரயில் வியாழக்கிழமை (பிப். 28) முதல் அரக்கோணம் வரை இயக்கப்பட உள்ளது.
சேலம்-காட்பாடி பயணிகள் ரயிலை (வண்டி எண்: 66019, 66020) அரக்கோணம் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை பரிசீலித்த ரயில்வே வாரியம், சேலத்தில் இருந்து அரக்கோணம் வரை ரயில் சேவையை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வியாழக்கிழமை (பிப்ரவரி 28) முதல் சேலம்-காட்பாடி ரயில் அரக்கோணம் வரை இயக்கப்பட உள்ளது. அந்த வகையில், சேலத்தில் இருந்து வியாழக்கிழமையும் (பிப். 28), அரக்கோணத்தில் இருந்து மார்ச் 1-ஆம் தேதியும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. சேலத்தில் இருந்து சனிக்கிழமைகளை தவிர்த்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு அரக்கோணத்துக்கு இரவு 10.20 மணிக்கு சென்றடையும். அரக்கோணத்தில் இருந்து சனிக்கிழமைகளை தவிர்த்து அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டு காலை 11.15 மணிக்கு சேலம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT