தமிழ்நாடு

மே 31-க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

DIN


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வரும் மே மாதம் 31-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும், அதுதொடர்பான அறிவிப்பாணையை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் வெளியிடவும் உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. 
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறிய மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெஃரோஸ் கான் மற்றும் மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் ஆகியோர் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். 
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணை வரும் மே மாதம் 31-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT