முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதாவின் சொத்து, கடன் விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்யுமாறு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 2 ஜனவரி, 2019 at 7:11 PM
பகிர்:

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்யுமாறு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க தனியாக நிர்வாகியை நியமிக்கக் கோரி, கர்நாடக மாநில அதிமுக அமைப்புச் செயலராக இருந்தவரும், தற்போது அமமுகவிலிருப்பவருமான புகழேந்தி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு புதனன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் சொத்து மற்றும் விவரங்களை தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

Advertisement

அதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.