தமிழ்நாடு

கருணாநிதியின் சாதனைகள் இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்

DIN

கருணாநிதியின் சாதனைகள் இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் 2ஆவது நாளான இன்று, மறைந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கருணாநிதி ஆகியோருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். பன்முக தன்மை கொண்ட தலைவர் கருணாநிதி, 5 முறை தமிழக முதல்வராக இருந்த பெருமைக்குரியவர். சமூக விழிப்புணர்வை தன்னுடைய எழுத்தின் மூலம் ஏற்படுத்தியவர் கருணாநிதி.  

இந்தித்திணிப்பை எதிர்த்து 13 வயதினிலே போராடியவர் கருணாநிதி. சிறப்பான திட்டங்களை தமிழகத்துக்கு அளித்தவர். அதை அதிமுக சில நேரங்களில் பின்பற்றியும் உள்ளது. தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வென்றவர். அவருடைய சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்"- என்று புகழாரம் சூட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT