தமிழ்நாடு

கின்னஸ் சாதனைக்காகவே தேர்தலில் போட்டி: கே. பத்மராஜன்

கின்னஸ் சாதனைக்காக போட்டியிடுவதால், தேர்தலில் தோற்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றார் சுயேச்சையாகப் போட்டியிடும் கே. பத்மராஜன்.

DIN


கின்னஸ் சாதனைக்காக போட்டியிடுவதால், தேர்தலில் தோற்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றார் சுயேச்சையாகப் போட்டியிடும் கே. பத்மராஜன்.
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த கே.பத்மராஜன்  செய்தியாளர்களிடம் கூறியது: 1988-இல் இருந்து தேர்தல்களில் போட்டியிட தொடங்கினேன். இதுவரை ஜனாதிபதி தேர்தல், துணை ஜனாதிபதி தேர்தலில் தலா 5 முறை, நாடாளுமன்றத் தேர்தலில் 29 முறை, மாநிலங்களவைத் தேர்தலில் 39 முறை, சட்டப் பேரவைத் தேர்தலில் 62 முறை மற்றும் பல்வேறு தேர்தல்களில் என இதுவரை மொத்தம் 198 முறை போட்டியிட்டுள்ளேன். தற்போது திருவாரூர் இடைத் தேர்தலில் 199-ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். 
கின்னஸ் சாதனை செய்வதற்காகவே தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிடுகிறேன். வாஜ்பாய், நரசிம்மராவ், எடியூரப்பா, பங்காரப்பா, எஸ்.எம். கிருஷ்ணா, ஆர்.கே. நாராயணன், கருணாநிதி, ஜெயலலிதா, நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களோடு போட்டியிட்டுள்ளேன். 
தேர்தலில் போட்டியிடுவதால் பிரசாரத்துக்கெல்லாம் செல்ல மாட்டேன். கின்னஸ் சாதனைக்காக போட்டியிடுவதால், தேர்தலில் தோல்வி அடையவே விரும்புகிறேன் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT