கோப்புப்படம் 
தமிழ்நாடு

திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் தேர்வு 

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிவித்துள்ளார்.  

DIN


திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிவித்துள்ளார்.  

திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையடுத்து, காலியாக இருக்கும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 31-ஆம் தேதி அறிவித்தது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 10-ந்தேதி கடைசி நாளாகும். 

இதில், நாம் தமிழர் சார்பில் சாகுல் அமீது போட்டியிடுவார் என்று முதல் கட்சியாக வேட்பாளர் பெயரை அறிவித்தது. 

இதைத்தொடர்ந்து, அமமுக சார்பில் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என்று டிடிவி தினகரன் இன்று அறிவித்தார். 

இதையடுத்து, திமுக வேட்பாளருக்கான நேர்காணல் இன்று மாலை நடைபெற்றது. நேர்காணலின் முடிவில் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT