தமிழ்நாடு

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ராஜிநாமா

DIN

பேருந்து மீது கல்வீசித் தாக்கிய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். முதல்வரைச் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் ராஜிநாமா கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்தார். 

முன்னதாக, 1998-ஆம் ஆண்டு விஷச் சாராயம் குடித்து 33 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது நடந்த சாலை மறியல் போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்திவைக்குமாறும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, தண்டனையை நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT