தமிழ்நாடு

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..!

DIN


சென்னை: வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கே, காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், இதையடுத்து தமிழகம், புதுச்சேரிக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:  

வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கே, காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால், வளிமண்டலத்தை கடக்கும் மேக கூட்டங்களால், வரும் 25 ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்து வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT