தமிழ்நாடு

நாட்டிலேயே பொருளாதாரத்தில் சிறந்த இரண்டாவது மாநிலம் தமிழகம்: முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் பேச்சு 

நாட்டிலேயே பொருளாதாரத்தில் சிறந்த இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று  சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். 

DIN

சென்னை: நாட்டிலேயே பொருளாதாரத்தில் சிறந்த இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று  சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். 

இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தென் கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெரு முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுடன் தேசிய அளவில் பிரபல தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன. இந்த மாநாட்டின் மூலம் ரூ.2.50 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு  வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அவருடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம், மாநில அமைச்சர்கள்  மற்றும் தொழில்  அதிபர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

முதல்வர் பழனிசாமி தனது உரையில் கூறியதாவது:-

நாட்டிலேயே பொருளாதாரத்தில் சிறந்த இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது

தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. 

உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. 

இதற்கு துணை செய்யும் வகையில் கல்வியிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் 48% பேர் உயர்கல்வி பயின்றுள்ளனர்.

2015-ம் ஆண்டு நடைபெற்ற முதல் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு பெரிய வெற்றி பெற்றது. அதில் 98 திட்டங்களுக்காக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டன. அந்த நிறுவனங்கள், உற்பத்தியை தொடங்குவதற்கான செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

பொதுவாகவே தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்க ஒற்றை சாளர முறை தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது. 

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு: 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை

இந்து மகா சபா சாா்பில் விநாயகா் சிலை பிரதிஷ்டை

பத்திரப் பதிவுக்கு 2 நாள்கள் கூடுதல் டோக்கன்

87 % வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை: அன்புமணி

உயரும் ஊட்டி பூண்டு விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT