தமிழ்நாடு

தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: வைகோ திட்டவட்டம்

DIN


மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் மோடிக்கு மதிமுக சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று வைகோ தெரிவித்துள்ளார். 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். அவர் வரும்போது மதிமுக சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

"நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், முல்லைப் பெரியாறு மற்றும் மேக்கேதாட்டு போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அனுமதி வழங்குகிறது. இந்த திட்டங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியை கொடுக்கும். ஆனால், தமிழகத்தை அழித்துவிடும். 

அதனால், பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் போது மதிமுக நிர்வாகிகள் கருப்புக் கொடி ஏந்துவார்கள். இந்த போராட்டம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிரானது அல்ல. தமிழக நலனை புறக்கணித்த காரணத்துக்காக மோடிக்கும், அவருடைய அரசுக்கும் எதிரானது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

நாடு விட்டு நாடு பயணம்: இசை நிகழ்வு காணவா? டெய்லர் ஸ்விஃப்ட் காய்ச்சலில் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT