தமிழ்நாடு

போலீசார் திட்டியதால் கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை: காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு 

போலீசார் திட்டியதால் கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு  காவல்துறைக்கு மாநில  மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

சென்னை: போலீசார் திட்டியதால் கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு  காவல்துறைக்கு மாநில  மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ், கால் டாக்சி டிரைவர். இவர் வியாழனன்று ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அவர் வெளியிட்ட விடியோ ஒன்றில், போக்குவரத்து போலீசார் தன்னை அவதூறாகப் பேசியதாகவும், தனது மரணத்திற்கு சென்னை காவல்துறையினர்தான் பொறுப்பு என்றும் தெரிவித்திருந்தார்

இதற்கிடையே ராஜேஷின் விடியோ தொடர்பாகவும், அவதூறாக பேசிய காவலர் யார் என்பது குறித்தும் குறித்தும் விசாரிக்க சென்னை காவல்துறை இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரம் தொடர்பாக இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில், தாமாக முன்வந்து இதுகுறித்து விசாரணை நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

எனவே இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

SCROLL FOR NEXT