தமிழ்நாடு

மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு இல்லை: மக்களவையில் அமைச்சர் தகவல்

DIN


மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் நிதி வழங்கப்பட மாட்டாது என்று மக்களவையில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். 
மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது இது தொடர்பாக நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் ஆ.ராசா துணைக் கேள்வி எழுப்பினார். 
அதில், தமிழகத்தில் பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஆகவே, இந்த விஷயத்தில் அமைச்சர் நடவடிக்கை ஏதும் எடுப்பாரா?' என்றார்.
 இதற்கு மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில் அளித்துப் பேசியதாவது: தமிழகத்தில் கிராமப் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது மிகவும் அவசியமாகும். அதற்க்காக மத்திய அரசு அடிக்கடி வேண்டுகோள் விடுத்துள்ளது. கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் நடத்தவில்லையெனில் அந்த மாநிலங்களுக்கு நிதிக் கமிஷனின் நிதி, மத்திய அரசிடமிருந்து விடுவிக்கப்படுவதில்லை என்பதை உறுப்பினருக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நாங்கள் மாநிலங்களிடம் தேர்தல் நடத்துங்கள், எங்களிடம் நிதி இருக்கிறது என்று கூறி வருகிறோம். நாங்கள் நிதி கொடுப்பதற்குத் தயாராக உள்ளோம். ஆனால், மாநிலங்களின் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 
அடிக்கடி இதுபோன்று வழக்குகள் இருப்பதால் தேர்தல் நடப்பதில்லை. எனவே, எங்கெல்லாம் கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் நடக்காமல் உள்ளதோ, அந்த மாநிலங்களுக்கு நிதியை விடுவிப்பதில்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT