முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

வட தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:38 AM
பகிர்:


சென்னை: வட தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து கர்நாடக பகுதிகளில் வலுவாக உள்ளது. 

நேற்று தமிழகப் பகுதிகளில் நிலவி வந்த வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து இன்றும் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்யும்.
கன மழையைப் பொருத்தவரை..

வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்.. அதிகபட்சமாக 
திருப்புவனம் - 9 செ.மீ.
ஆரணி மற்றும் திருப்பத்தூரில் தலா - 8 செ.மீ.
உத்திரமேரூர் - 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை  மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இடைவெளி விட்டு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கடந்த ஜூன் 1 முதல் நேற்று வரையிலான கால கட்டத்தில் பெய்திருக்கும் மழையின் அளவானது 89 மி.மீ. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு 117 மி.மீ. இது 24 சதவீதம் குறைவு. 

பற்றாக்குறை மழை குறைவாகவே உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்த பற்றாக்குறையும் குறைந்து வருகிறது என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →