தமிழ்நாடு

திண்டுக்கல்-திருச்சி பயணிகள் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

திண்டுக்கல் திருச்சி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 15 நிமிடங்கள் முன்னதாக இனி புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி

திண்டுக்கல் திருச்சி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 15 நிமிடங்கள் முன்னதாக இனி புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திண்டுக்கல் - திருச்சி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் (வண்டி எண் 56704), திண்டுக்கல்லில் இருந்து காலை  6.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 6.15 மணிக்கு புறப்படும். 

இந்த ரயில் தாமரைப்பாடியிலிருந்து காலை 06.26 மணிக்கும், வடமதுரையில் இருந்து காலை 06.35 மணிக்கும், அய்யலூரில் இருந்து காலை 06.45 மணிக்கும், கல்பட்டி சத்திரத்திலிருந்து காலை 06.55 மணிக்கும், வையம்பட்டியில் இருந்து காலை 07.05 மணிக்கும், செட்டியபட்டியில் இருந்து காலை 07.13 மணிக்கும், மணப்பாறையில் இருந்து காலை 07.30 மணிக்கும், சமுத்திரத்தில் இருந்து காலை 07.38 மணிக்கும், குளத்தூரில் இருந்து காலை 07.47மணிக்கும், பூங்குடியில் இருந்து காலை 08.00 மணிக்கும் புறப்பட்டு காலை 08.25 மணிக்கு திருச்சியை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT