தமிழ்நாடு

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை:  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் 

DIN

சென்னை: தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த ஆண்டு 17 பேரை பலி கொண்ட ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தற்போது மீண்டும் அம்மாநிலத்தை தாக்கி உள்ளது. கல்லூரி மாணவர் ஒருவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நோயை கட்டுப்படுத்த மத்திய குழு கேரளா விரைந்து தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மாணவருடன் நெருக்கமாக பழகிய பிற மாணவர்கள், மற்றும் உறவினர்கள் என 300 பேர் மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பின் கீழ்   உள்ளனர். மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதையடுத்து தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு தனது முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் துவக்கமாக தமிழக எல்லை பகுதிகள், அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிகிச்சை விபரங்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதனன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பழம்தின்னி வௌவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவுவதால் பழங்களை மக்கள் நன்கு கழுவிய பின்னரே  சாப்பிடவேண்டும். 

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.  கேரள எல்லையில் உள்ள 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கவனத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT