தமிழ்நாடு

 கேரளாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பு: தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம் 

அண்டை மாநிலமான கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதையடுத்து தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

சென்னை: அண்டை மாநிலமான கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதையடுத்து தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஆண்டு 17 பேரை பலி கொண்ட ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தற்போது மீண்டும் அம்மாநிலத்தை தாக்கி உள்ளது. கல்லூரி மாணவர் ஒருவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நோயை கட்டுப்படுத்த மத்திய குழு கேரளா விரைந்து தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மாணவருடன் நெருக்கமாக பழகிய பிற மாணவர்கள், மற்றும் உறவினர்கள் என 300 பேர் மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பின் கீழ்   உள்ளனர். மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதையடுத்து தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு தனது முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் துவக்கமாக தமிழக எல்லை பகுதிகள், அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிகிச்சை விபரங்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் 'நிபா; வைரஸ் அறிகுறிகள் எங்கேனும் தென்பட்டால் 044-24350496, 044-24334811, 9444340496, 8754448477 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT