சென்னை: நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஏழை மாணவியின் மருத்துவக் கல்லூரி கட்டண செலவை ஏற்கிறேன் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
நீட் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த ஏழை தையல் தொழிலாளர் மகள் மாணவி ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி அவருடைய மருத்துவ கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொள்கிறேன்.
ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவ கனவு நனவாகட்டும்...மாணவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.