தமிழ்நாடு

திமுக கூட்டத்தில் மோதல்: நிர்வாகிக்கு கத்திக்குத்து 

DIN

ராமநாதபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கத்தியால் குத்தப்பட்டார்.
 திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே. நவாஸ் கனி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ராமநாதபுரம் அருகேயுள்ள சாத்தான்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
 இக்கூட்டத்தில், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகுவுக்கும், மாநில செயற்குழு உறுப்பினர் பி.டி. ராஜா தரப்பினருக்கும் இடையே திடீரென ஏற்பட்ட மோதலில் இன்பா ரகுவை திடீரென ஒருவர் கத்தியால் குத்தினார். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 இந்தச் சம்பவம் தொடர்பாக, திமுக மாநில செயற்குழு உறுப்பினர் பி.டி.ராஜா, வாலாந்தரவை ஜெயபால், வழுதூர் விஜயகுமார், சாமிநாதன், சிவசாமி, தவராஜ் மற்றும் சிலர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT