முகப்பு
தமிழ்நாடு

ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம்: அதுவும் உயிரைக் காக்கும் தலைக்கவசம்!

தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்வோரும், டீலர்களும், புதிய வாகனங்களை விற்பனை செய்யும் போது அதனுடன் 2 தலைக்கவசங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 12 ஜூன், 2019 at 3:57 PM
பகிர்:


தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்வோரும், டீலர்களும், புதிய வாகனங்களை விற்பனை செய்யும் போது அதனுடன் 2 தலைக்கவசங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக போக்குவரத்துத் துறை இது குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம், சாலை விபத்தினால் தலைக்கவசம் அணியாதவர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் 73 சதவீதம் தலைக்கவசம் அணியாததால் நடப்பதாகவே இருக்கிறது. எனவே, புதிய வாகனங்களை விற்கும் போது அதனுடன் தரமான இரண்டு தலைக்கவசங்களை வெளியிட வேண்டும் என்று போக்குவரத்துத் துறை ஆணையர் சமயமூர்த்தி வெளியிட்ட உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால் இதற்கு வாகன டீலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த உத்தரவால் தங்களது லாபம் குறையும் என்றும், இரண்டு தலைக்கவசங்களின் விலை ரூ.3000 முதல் ரூ.3500 வரை ஆகும் என்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.