தமிழ்நாடு

காலமானார் பேராசிரியர் இரா.மோகன்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், தமிழ் ஆர்வலருமான இரா. மோகன் (69)  உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். 

DIN


மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், தமிழ் ஆர்வலருமான இரா. மோகன் (69)  உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஒப்பிலக்கியத் துறைத் தலைவராக பணியாற்றிய இவர்,  பட்டிமன்ற நடுவராகவும் இருந்துள்ளார். பேராசிரியர் மோகன் ஒப்பிலக்கியம்,  தமிழாய்வு,  தன் முன்னேற்ற சிந்தனைகள், தமிழ் வளர்ச்சி நூல்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 
2011-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது பெற்றுள்ள அவர், சாகித்ய அகாதெமி அமைப்பின் பொதுக்குழு உறுப்பினராக 10 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். பேராசிரியர் இரா.மோகன் பணி ஓய்வு பெற்ற பின்னர் காமராஜர் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு மனைவி, மகள் உள்ளனர். பேராசிரியர் இரா. மோகனின் இறுதிச் சடங்கு மதுரையை அடுத்த நாகமலைப்புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.  தொடர்புக்கு: 94436-75931.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

SCROLL FOR NEXT