தண்ணீர்பந்தல்பாளையம் மந்தையில் ஊர் பொதுமக்களிடம் கலந்துரையாடுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.  
தமிழ்நாடு

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

DIN

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னர் பகுதி மற்றும் பவித்திரம் ஜெயந்தி நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற திண்ணை பிரசாரத்தின்போது, நன்றி தெரிவித்து வாக்காளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியது:  அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என மக்கள் கூறுகிறார்கள். நிச்சயம் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது. அதில் நாம் தான் வெற்றி பெறுவோம். நம் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் குடிநீர், கழிவுநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தருவார்கள். விரைவில் ஆட்சி மாற்றமும் வரப்போகிறது. நீங்கள் நினைக்கும் அனைத்து நலத்திட்டங்களும் உங்களுக்கு வந்து சேரும் என்றார்.
இதையடுத்து, தண்ணீர்பந்தல்பாளையம் மந்தை, பள்ளபட்டி பேருந்து நிறுத்தம், வேலாயுதம்பாளையம் நொய்யல் குறுக்கு சாலை, பவித்திரம் ஜெயந்தி நகர் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT