தமிழ்நாடு

ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

DIN

ராகுல் காந்தியின் 49ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்திக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர உட்பட தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ராகுலுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டரில், "எமது நல்ல நண்பரான ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற ராகுல் காந்தி கட்சியின் தெண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT