முகப்பு
தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல்: 11 - ஆம் தேதி துவக்கம் என்று அதிமுக அறிவிப்பு 

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல்: 11 - ஆம் தேதி துவக்கம் என்று அதிமுக  தலைமையகம் அறிவித்துள்ளது. 

Updated On : 8 மார்ச், 2019 at 6:59 PM
பகிர்:

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல்: 11 - ஆம் தேதி துவக்கம் என்று அதிமுக  தலைமையகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல்: 11 - ஆம் தேதி துவங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது..

Advertisement

இந்த நேர்காணலானது ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெறும்.

சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு மற்றும் திருப்பூர் தொகுதிகளுக்கான  வேட்பாளர்கள் நேர்காணல் 11ஆம் தேதி நடக்கும்.

விருப்பமனு அளித்துள்ள உறுப்பினர்கள் வேட்பாளர்கள் நேர்காணலில் பங்கேற்க வேண்டும்

இவ்வாறு அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.