தமிழ்நாடு

ஈபிஎஸ், ஓபிஎஸ் மீது வைத்த குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற மாட்டேன்: மீண்டும் இணைந்த கே.சி.பழனிசாமி பேட்டி

DIN

சென்னை: ஈபிஎஸ், ஓபிஎஸ் மீது வைத்த குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற மாட்டேன் என்று அதிமுகவில்  மீண்டும் இணைந்த கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி காவிரி விவகாரத்தில் பாஜகவை விமர்சித்ததால் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் அதிமுகவில் இன்று மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டார். 

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்தார். 

இந்நிலையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மீது வைத்த குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற மாட்டேன் என்று அதிமுகவில்  மீண்டும் இணைந்த கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.சி.பழனிசாமி கூறியதாவது:

காலங்கள் மாறுவதைப்போல கட்சியின் தலைமைகள் மாறும். தேர்தல் காலத்தில் மனவேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றாக பணியாற்ற வேண்டும்.

தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பணியாற்ற வேண்டியது கடமை என்பதால்இணைந்து பணியாற்றுகிறேன்

நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட விருப்பமனு அளிக்கவில்லை, நான் போட்டியிட மாட்டேன்

முன்னர் ஈபிஎஸ்,ஓபிஎஸ் மீது வைத்த குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறமாட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT