தமிழ்நாடு

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  பெண்ணின் புதிய விடியோ வெளியானதா? காவல் துறை வட்டாரங்கள் மறுப்பு

தினமணி

பொள்ளாச்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பார் நாகராஜ் தொடர்புடைய விடியோ காட்சி வெளியாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் பரப்பரப்பாகப் பேசப்பட்டது.  ஆனால், இதை மறுத்துள்ள காவல் துறை வட்டாரங்கள் தற்போது வெளியாகியுள்ள விடியோவானது காவல் துறையால் ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட நான்கு விடியோக்களில் ஒன்று தான் என்றனர்.

இந்தக் கும்பலிடம் சிக்கியப் பெண் ஒருவருடன் பார் நாகராஜ் இருப்பது போன்ற இரண்டு விடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவின. அதில் தன்னுடன் இருக்கும் பெண்ணை பாலியல் ரீதியாக பார் நாகராஜ் துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விடியோவை சபரிராஜன், சதீஷ் சேர்ந்து எடுத்துள்ளது அவர்களது பேச்சின் மூலம் தெரிகிறது.

மேலும், விடியோவில் இடம்பெற்றுள்ள பெண்ணிடம் சபரிராஜன் மிரட்டும் தொனியில் பேசுவதும் பதிவாகியுள்ளது. விடியோ காட்சி வெளியானதையடுத்து ஆத்திரமடைந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் சூளேஸ்வரன் பட்டியில் உள்ள நாகராஜுக்குச் சொந்தமான மதுபானக் கடையை புதன்கிழமை அடித்து நொறுக்கினர். 

புதிதாக வெளியான விடியோ குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளிப்பதற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர், அவரது நண்பர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பினர் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் செல்லிடப்பேசியில் இருந்த விடியோக்களை தங்களது செல்லிடப்பேசிக்குப் பகிர்ந்துள்ளனர்.

இந்த விடியோதான் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. காவல்துறையால் கைப்பற்ற நான்கு விடியோக்களைத் தவிர புதிய விடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT