முகப்பு
தமிழ்நாடு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு 

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு 

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:24 AM
பகிர்:

சென்னை: இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. தமாகாவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமாகா சார்பாக தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என்று கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். அத்துடன் தமாகா தனி சின்னத்தில் போட்டியிடும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சஹூ வெளியிட்டார்.

தமாகா முன்னரும் சைக்கிள் சின்னத்தில்தான் போட்டியிட்டு வந்தது. ஆனால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகாவுக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →