தமிழ்நாடு

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி 

DIN

சென்னை: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில் தனித்துப்போட்டியிடப் போவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்திருந்தது,.

அக்கட்சிக்கு என பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களை பெற்று நேர்காணலும் நடந்து முடிந்திருந்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் புதன் மதியம் 2 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

திங்களன்று கமலை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திங்களன்று கமலை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் கூறியதாவது:

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் 1 தொகுதியிலும்,  தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் இந்திய குடியரசுக் கட்சி போட்டியிட உள்ளது.

இவை இரண்டிலும் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட உள்ளோம்.

தமிழகத்திற்கு தேவையான ஒரு மாற்று அரசியலை மக்கள் நீதி மய்யம் வழங்கும் என்று நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT