தமிழ்நாடு

நாடாளுமன்றத் தேர்தல்: தமிழகத்தில் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு 

DIN

புது தில்லி: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது.

தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கியது போக அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் கடந்த ஞாயிறு அன்று வெளியானது.

அதேபோல  தேமுதிக மற்றும் பாமக கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தில்லியில் மத்திய சுககாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா வியாழனன்று இந்த பட்டியலை வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:

தூத்துக்குடி - தமிழிசை சவுந்திரராஜன்

ராமநாதபுரம்  நயினார் நாகேந்திரன்

கோவை - சி.பி.ராதாகிருஷ்ணன்

சிவகங்கை - ஹெச்.ராஜா

கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்னன் 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT