தமிழ்நாடு

அதிமுகவின் எதிர்கால நலன் கருதி ஆதரவு தருகிறேன்.. சொல்லியிருப்பது யார் தெரியுமா?

மக்களவை மற்றும் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவளிப்பதாக தலைவர் ஜெ. தீபா அறிவித்துள்ளார்.

DIN


சென்னை: மக்களவை மற்றும் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவளிப்பதாக தலைவர் ஜெ. தீபா அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. தீபா, அதிமுகவின் எதிர்கால நலன், வெற்றியைக் கருத்தில் கொண்டு அக்கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும், மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அது அதிமுக தொண்டர்களின் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
 
அதிமுகவோடு இணையும் பேச்சுவார்த்தை தேர்தலுக்குப் பிறகு தொடரும், தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுடன் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இணைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

அதிமுகவின் வெற்றிக்காக எனது கட்சி தொண்டர்கள் , நிர்வாகிகள் ஈடுபடுவார்கள். அதிமுக தலைமை கேட்டுக் கொண்டால் அக்கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் தீபா அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT