தமிழ்நாடு

தமிழக பாஜக வேட்பாளர்களுக்கு பியூஷ் கோயல் வாழ்த்து

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களுக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் டுவிட்டரில் வாழ்த்து

DIN


புதுதில்லி: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களுக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் கன்னியாகுமரி தொகுதிக்கு     பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தொகுதிக்கு    தமிழிசை செளந்தரராஜன், சிவகங்கை    தொகுதிக்கு ஹெச்.ராஜா,
கோவை தொகுதிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் தொகுதிக்கு நயினார் நாகேந்திரன் வேட்பாளர்களாக அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா நேற்று அறிவித்தார்.   
இந்நிலையில், தமிழக பாஜக வேட்பாளர்களான பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

வாழ்த்து செய்தியில், தமிழக மக்கள் பெரும் எண்ணிக்கையில் பாஜகவை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என பியூஷ் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT