தமிழ்நாடு

மணமகனுக்கு தர்மசங்கடம்: ரூ.80 ஆயிரம் இழப்பீடு தருகிறது ரெய்மண்ட் துணிக்கடை

ENS


சென்னை: கொடுங்கையூரைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர், தனது திருமணத்துக்காக எடுத்த விலை உயர்ந்த ஆடை, ரிசப்ஷனின் போது கிழிந்ததால், ரெய்மண்ட் துணிக்கடை இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து சுப்ரமணி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை நுகர்வோர் தீர்ப்பாயம், பாதிக்கப்பட்ட சுப்ரமணிக்கு புரசைவாக்கத்தில் உள்ள ரெய்மண்ட் துணிக்கடை ரூ.80 ஆயிரம் இழப்பீடு தருமாறு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள திருமண ஆடையை சுப்ரமணியன் வாங்கியுள்ளார். அங்கேயே கோட் தைத்து செப்டம்பர் மாதம் தனது திருமணத்தின் போது அணிந்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அது ரிசப்ஷனின்போது கிழிந்து விட்டது. இதனால் சுப்ரமணியன் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். 

இது குறித்து நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையிட்டார். இதனை விசாரித்த தீர்ப்பாயம், சுப்ரமணிக்கு தரமற்ற துணியை விற்பனை செய்ததற்கு இழப்பீடாக ரூ.80 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT