முகப்பு
தமிழ்நாடு

மது அருந்துவதற்காக நீர்ப்பந்தல் டம்ளர்களைத் திருடிய காவலர்கள்: வைரல் விடியோ  

புதுக்கோட்டை அருகே மது அருந்துவதற்காக நீர்ப்பந்தல் டம்ளர்களைத் காவலர்கள் இருவர் திருடும் விடியோ வைரல் ஆகப் பரவி வருகிறது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:50 AM
பகிர்:

மேற்பனைக்காடு: புதுக்கோட்டை அருகே மது அருந்துவதற்காக நீர்ப்பந்தல் டம்ளர்களைத் காவலர்கள் இருவர் திருடும் விடியோ வைரல் ஆகப் பரவி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள மேற்பனைக்காடு பேட்டை பகுதியில் கோடை காலத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்காக,ஊர் இளைஞர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் ஆரம்பிக்கப்பட்டது.  ஆனால் அங்கு வைக்கப்படும் டம்ளர்கள் தொடந்து காணாமல் போன வண்னம் இருந்தன

அவற்றை யார் எடுக்கிறார்களென்பதை கண்டறிய முடியாததால் அங்கு ஒரு சிசிடிவி வெள்ளிக்கிழமையன்று அமைக்கப்பட்டது.  அந்த சிசிடிவி பதிவுகளை  சனிக்கிழமையன்று  ஆராய்ந்த போது, தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் டம்ளர்களை இரவு ரோந்து பணியில் இருக்கும் இரண்டு போலீசார் எடுத்து செல்லும் காட்சி, சிசிடிவி. கேமிராவில் பதிவானது தெரிந்தது.

விசாரணையில் அவர்கள் கீரமங்கலம் காவல் நிலைய  காவலர் ஐயப்பன் மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்த வடிவழகன் என்பது தெரிய வந்தது.

அந்த சிசிடிவி காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

நன்றி: புதிய தலைமுறை

முழு கட்டுரையைப் படிக்க →