முகப்பு
தமிழ்நாடு

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதத்தில் சென்னைக்கு 2ம் இடம்

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டிருந்தது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:50 AM
பகிர்:


நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 13 பேர் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். 24 மாணவ, மாணவிகள் 498 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், 497 மதிப்பெண்களுடன் 58 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

தேர்வெழுதியவர்களில் 2.25 லட்சம் பேர் 90%ம் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 99.85% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் முதல் இடத்தில் உள்ளது. 99% தேர்ச்சியுடன் சென்னை இரண்டாம் இடத்திலும் 95.58% தேர்ச்சியுடன் அஜ்மீர் 3ம் இடத்திலும் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.