தமிழ்நாடு

நீர்நிலைகள் பாதுகாப்பு; தலைமை செயலாளர் ஆலோசனை

DIN


நீர் நிலைகளைப் பாதுகாப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் திங்கள்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, குடிநீர் வாரியம் உள்பட  பல்வேறு துறைகளைச் சார்ந்த உயரதிகாரிகள்  பங்கேற்றனர். 
இதில், நீர்வள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
நீதிமன்றம் உத்தரவு:  மழைக்காலங்களில் வெள்ள நீர் கடலில் வீணாக கலப்பதைத் தடுக்கவும், சென்னையில் நவீன நீர் மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தவும் உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வி.பி.ஆர்.மேனன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.வேணுகோபால் மற்றும் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு மே 2-ஆம் தேதி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை அரசு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும்,  தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள், கழிவுநீர் கால்வாய்களை ஆறு மாதக் காலத்துக்குள் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்தப் பணிகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய வேண்டும். இந்தக் கடமைகளில் இருந்து தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல்துறை ஒத்துழைக்காவிட்டால், ராணுவத்தை வைத்து அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
அதைத் தொடர்ந்தே தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகளின் அவசரக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், நீர் நிலைகளைப் பாதுகாக்கும் குழு அமைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்றத்தில் அடுத்தகட்ட விசாரணையின்போது, தமிழக அரசின் சார்பில் அவை தெரிவிக்கப்பட உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

SCROLL FOR NEXT