தமிழ்நாடு

யானை தாக்கியதில் பெண் பலி

DIN


பெ.நா.பாளையம் கோவை வனச் சரகத்துக்கு உள்பட்ட ஆனைகட்டி அருகே யானை தாக்கியதில் பெண் புதன்கிழமை உயிரிழந்தனர். 

கோவை மாவட்டம், ஆனைகட்டி, ஆலமரமேடு அருகே உள்ள கொண்டனூர்புதூரைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (82). இவர் கொண்டனூர் வனக் குழுத் தலைவர் ரவியின் பாட்டி ஆவார். 

இந்நிலையில், தனது தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு பொன்னம்மாள் புதன்கிழமை காலை 6 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக கூட்டமாக வந்த காட்டு யானைகளில் ஒன்று பொன்னம்மாளை தும்பிக்கையால் தூக்கியபடி நடந்து சென்று கொண்டிருந்தது.

இதனைப் பார்த்த அங்கிருந்த பெண் ஒருவர் கூச்சலிட்டதால் மிரண்டு போன யானை, பொன்னம்மாளை கீழே போட்டு மிதித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இதுகுறித்து தடாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT