தமிழ்நாடு

மாற்றுச் சான்றிதழ்களில் சாதியை குறிப்பிடக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

DIN

பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் சாதியை குறிப்பிடக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த  சுற்றறிக்கையில், மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது சாதி என்ற இடத்தில் எந்தச் சாதியையும் குறிப்பிடாமல் வருவாய்த்துறை  சார்பில் வழங்கப்பட்ட ஆவணத்தில் பார்க்கவும்  என குறிப்பிடுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக  தக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.  ஏனெனில்  வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றே இறுதியானதும்,  ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல், பள்ளி மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழை பள்ளிகளில்  கைப்பட எழுதி வழங்கத் தேவையில்லை. பள்ளிக் கல்வித்துறையின் எமிஸ் இணையதளம் மூலம் மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்து, அதனை பின்னர் தரவிறக்கம் செய்து, தலைமை ஆசிரியர் கையெழுத்துட்டு மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும். அதன்படி வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் மாணவர்களின் சாதியை குறிப்பிட தேவையில்லை.  
இதனால் எமிஸ் இணையதளம் மூலம் இனி வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ்களில் சாதியின் பெயர் குறிப்பிடப்படாது என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT