தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் கலந்துகொள்ள அனுமதி

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22 -ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கல்லூரி மாணவி உள்பட 13 உயிரிழந்தனர். இந்நிலையில்,தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வரும் மே 22 -ஆம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. ஆனால் கூட்டம் நடத்துவதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. 

எனவே, மே 22-ஆம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமாபாபு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கூட்டத்தில்  யாரெல்லாம் பேசுகின்றனர், கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவர் என்ற விவரங்களை மனுதாரர் தரப்பு அரசு வழக்குரைஞரிடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி  ஆகியோர் கொண்ட அமர்வில்  கடந்த வியாழக்கிழமை  விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி பெல் ஹோட்டல் உள் அரங்கத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். மேலும், மே 22 -ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும், போலீஸாரின் நிபந்தனைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்றனர். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தி நீதிமன்றம் அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தது. 

ஏற்கனவே 250 பேர் கலந்து கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது 500 பேர் கலந்து கொள்ளலாம் என நீதிமன்றம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT