தமிழ்நாடு

நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குச்சாவடிக்கு மறு தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

DIN


நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த விருகம்பாக்கம் 109-ஆவது வார்டு வாக்குச்சாவடிக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில், மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. விருகம்பாக்கம் வாக்குச்சாவடியில் நடிகர் ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் வாக்களித்தனர். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்கள் இல்லை. இந்த குளறுபடிக்குக் காரணம் அதிகாரிகள் தான். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் பலர் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர்களை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியிருந்தாலும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி வாக்களித்த விருகம்பாக்கம் 109-ஆவது வார்டு வாக்குச்சாவடிக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டேன். இதுவரை மறு தேர்தல் குறித்து அறிவிக்கப்படவில்லை. எனவே 4 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத் தேர்தல் வரும் மே 19-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. அத்துடன் விருகம்பாக்கம் 109-ஆவது வார்டு வாக்குச்சாவடிக்கு மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில், மனுதாரர் இதுதொடர்பாக தேர்தல் வழக்குத் தொடரலாம்; ஆனால் மறு வாக்குப்பதிவு நடத்த கோர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (மே 17) ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT