தமிழ்நாடு

சென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் 

சென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் நடத்த உத்தேசித்திருந்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

DIN

சென்னை: சென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் நடத்த உத்தேசித்திருந்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நிலத்தடி நீரை எடுப்பதற்கு சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள்  திங்கள் (27-ந்தேதி) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்னரே அறிவித்தனர்.

ஏற்கனவே சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், தனியார் தண்ணீர் லாரிகளின் இந்த வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பினால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினையை அதிகரித்து விடும் சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் சென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் நடத்த உத்தேசித்திருந்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் தொடர்பாக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக லாரி உரிமையாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

SCROLL FOR NEXT