தமிழ்நாடு

சென்னையில் நவம்பர் மாதம் வரை குடிநீர் வினியோகத்தில் பிரச்சனை இல்லை: அமைச்சர் வேலுமணி 

சென்னையில் வரும் நவம்பர் மாதம் வரை குடிநீரைத் தடையின்றி வினியோகிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: சென்னையில் வரும் நவம்பர் மாதம் வரை குடிநீரைத் தடையின்றி வினியோகிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து,  அமைச்சர் வேலுமணி வெள்ளியன்று சென்னையில்  மாநில அளவிலான அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியர் அவர் கூறியதாவது:

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், வீராணம் நீர், நெய்வேலி நீர்ப்படுகையில் புதிய ஆழ்துளைக் கிணறுகள், விவசாயக் கிணறுகளை வாடகைக்கு எடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே சென்னையில் வரும் நவம்பர் மாதம் வரை குடிநீரைத் தடையின்றி வினியோகிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

அதேநேரம் பொது மக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT