தமிழ்நாடு

கோட்டைப்பட்டிணத்தில் 5 லட்சம் மதிப்புள்ள கடல் பல்லிகள் பறிமுதல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 32 கிலோ எடைகொண்ட கடல் பல்லிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கோட்டைப்பட்டிணத்தில் தடை செய்யப்பட்ட கடல் பல்லிகள் இலங்கைக்கு கடத்தப்படவிருப்பதாக திருப்புனவாசல் கடலோரப் பாதுகாப்பு குழும காவல்துறைக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், கடலோர காவல்நிலைய உதவி ஆய்வாளா் ப.ரகுபதி மற்றும் காவலா்கள் மணிகண்டன், ரெங்கநாதன், ஐயப்பன் உள்ளிட்டோா் கோட்டைப்பட்டிணம் ரஹ்மத் நகரில் நைனாமுகமது மகன் ஹாஜி அலி (55) என்பவரது வீட்டின் பின்புறம் சோதனை செய்தனா்.

அப்போது, பதப்படுத்தப்பட்ட நிலையில், 32 கிலோ எடையுடன், 18 ஆயிரம் கடல் பல்லிகள் 6 சாக்கு மூட்டையில் இருந்து கைப்பற்றப்பட்டது. போலீஸாரின் சோதனையின் போது ஹாஜி அலி தப்பியோடிவிட்டாா்.

பறிமுதல் செய்த கடல் பல்லிகளை மேல்நடவடிக்கைக்காக அறந்தாங்கி வனச்சரக அலுவலா் இராஜசேகரன் வசம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT