தமிழ்நாடு

நான் என்ன சரவணபவன் ஓட்டல் சர்வரா? ஆழ்துளைக் கிணறு பற்றிய புகாருக்கு ஆட்சியர் சொன்ன பதில் உண்மையா?

DIN


கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த கிராம நபர் ஒருவர், ஆழ்துளைக் கிணறு பற்றி புகார் கொடுத்ததற்கு ஆட்சியர் சொன்னதாக வெளியான ஆடியோ வைரலாகியுள்ளது.

வைரலாகிவரும் தொலைபேசி உரையாடலில், மாவட்ட ஆட்சியர் என்றும், மறுமுனையில் இளைஞரின் குரலும் பதிவாகியுள்ளது.

சுஜித் சம்பவத்தைத் தொடர்ந்து ஆழ்துளைக் கிணறு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆடியோ வெளியாகியுள்ளது.

அதாவது, தரங்கம்பட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கரூர் ஆட்சியர் அன்பழகனுக்கு திங்கட்கிழமை இரவு தொலைபேசி மூலம் தொடர்ந்து கொண்டு, தங்கள் கிராமத்தில் திறந்திருக்கும் ஆழ்துளைக் கிணறை மூட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறார்.

இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அந்த இளைஞர் குறிப்பிடுகிறார்.

இதற்கு பதிலளித்த ஆட்சியர், உங்கள் தாலுகாவின் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சென்று முறையிடுங்கள். அவரிடம் சொல்வது உங்களுக்கு ஏதேனும் தயக்கம் இருக்கிறதா? நீங்கள் அவரைச் சென்று சந்தித்து புகார் அளித்தீர்களா? உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்தால், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரடியாக முறையிடுங்கள். நான் என்ன சரவணபவன் ஓட்டல் சர்வரா? அழைப்பை துண்டித்துவிடு ராஸ்கல் என்று சொல்லும் ஆடியோ பதிவாகியுள்ளது.

இது கிராமத்தினர் இடையே பரவி, அப்படியே சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT